Monday, October 03, 2011அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் எதிர்வரும் 16ம் திகதி மீண்டும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் அரசாங்கத்திற்கும் தமி;ழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
ஆளும் கட்சிப் பிரதிநிதிகள் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பிரச்சாரங்களில் தீவிரம் காட்டி வருவதனால் இன்றைய தினம் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்டது.
சில காலமாக தடைப்பட்டிருந்த பேச்சுவார்த்தைகள் சர்வதேச அழுத்தங்களின் காரணமாக மீளவும் தொடர்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பரிந்துரைகள், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பரிந்துரைகள் மற்றும் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் ஆகியவற்றின் அடிப்படையில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
No comments:
Post a Comment