Pages

Saturday, September 10, 2011

இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் - இந்தியாவின் கருத்தை அறியும் முயற்சிகளில் UN!

Saturday, September 10, 2011
இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் - இந்தியாவின் கருத்தை அறியும் முயற்சிகளில் UN!
இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இந்தியாவின் கருத்தை அறிவதற்கான முயற்சிகளை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் நடவடிக்கை எடுத்திருக்கிறார்.

இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்தான விவாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 18 ஆவது கூட்டத் தொடரில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. நாளை மறுதினம் ஆரம்பமாகும் கூட்டத் தொடரின் ஆரம்பநாள்களில் இலங்கை விவகாரத்தை மேற்குலகு எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வாறான ஒரு நிலையில் இந்தியாவின் கருத்து என்னவென்று அறிய ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூன் முற்பட்டிருக்கிறார். இதனைக் கொழும்பிலுள்ள மூத்த இராஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்னர் ஐ.நா.விலுள்ள இந்தியாவின் இராஜதந்திரிகளுடன் முக்கிய பேச்சுகளை நடத்திய பான் கீ மூன், சர்வதேச போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு குறித்து வினவியுள்ளார். இந்தக் கூட்டத்தில் போர் நடந்த நேரத்தில் இலங்கையுடன் நெருங்கிச் செயற்பட்ட ஐ.நா. அதிகாரிகளும் உடன் இருந்தனர்.

இந்தியாவின் நிலைப்பாடு ஐ.நா.மனித உரிமைகள் சபையில் விவாதம் நடக்கும் போது உத்தியோகபூர்வமாகத் தெரியவரும் என இந்தச் சந்திப்பில் இந்திய இராஜதந்திரிகள் பதிலளித்துள்ளனர் எனத் தெரியவருகிறது.பான் கீ மூனுடன் நடத்திய பேச்சுகள் குறித்து இந்திய இராஜதந்திரிகள் புதுடில்லியிலுள்ள வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கும் தெரியப்படுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment