Pages

Friday, September 23, 2011

ஜேவிபியின் இரிதா லங்கா பத்திரிகை விற்பனைக்கு அனுமதிக்கப்படாமல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது!

Friday 23rd of September 2011
ஜேவிபியின் இரிதா லங்கா பத்திரிகை விற்பனைக்கு அனுமதிக்கப்படாமல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

ஜேவிபியின் கொழும்பு மாநகரசபை வேட்பாளர் சுனில் வட்டகலவும் இன்னும் இரண்டு லங்கா பாஸ்ற் பப்ளிகேஷன்ஸைச் சேர்ந்த பணிப்பாளர்கள் இருவரும் கொடுத்த முறைப்பாட்டை அடுத்து கிராண்பாஸ் பொலிஸாரால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பணிப்பாளர்களாகிய தங்களுடைய அனுமதி இல்லாமலே பத்திரிகை அச்சிடப்பட்டதாகக்கூறி பத்திரிகைகளை வெளிமாவட்டங்களுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் லக்பிம பத்திரிகை வளாகத்துக்கு பொலிஸாரை அழைத்து வந்த பணிப்பாளர்கள் பத்திரிகையை விநியோகத்திற்கு அனுப்புவதைத் தடை செய்யும் இந்நடவடிக்கையை மேற்கொண்டனர்.

பத்திரிகை எங்களுடைய அனுமதி இல்லாமலே அச்சிடப்பட்டிருக்கிறது. ஆகவே அவற்றை நாங்கள் விற்பனைக்கு அனுப்ப முடியாது என்று பணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை லங்கா பத்திரிகையின் ஆசிரியர் சந்தன சிறிமல்வத்தை பத்திரிகை ஏன் தடுத்து நிறுத்தப்பட்டது என்று தனக்குத் தெரியாது என்று ஊடகங்களுக்குத் தெரிவித்திருக்கிறார்.

லங்கா பத்திரிகை ஜேவிபியின் கிளர்ச்சியாளர்களுக்கு குறிப்பாக கல்விப்பிரிவின் தலைவரான புவுடு ஜாகொட,வுக்கு ஆதரவளிப்பதாகக் கூறப்படுகிறது.

இதேவேளை நேற்று கஜேவிபியின் ஊடகப்பரிவில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவளித்தவர்கள் அதிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment