Thursday, September 22, 2011

இந்தியாவின் கிழக்குப்பிராந்திய கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் எச்.சி.எஸ். பிஸ்ட் கோத்தபாய ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்!

Thursday, September 22, 2011
இந்தியாவின் கிழக்குப்பிராந்திய கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் எச்.சி.எஸ். பிஸ்ட் நேற்று முன்தினம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

கொழும்பில் பாதுகாப்பு அமைச்சில் இந்தச் சந்திப்பு இடம் பெற்றுள்ளது. இந்திய இலங்கை கடற்படையினரின் கூட்டுப்பயிற்சி கடந்த 19 ஆம் திகதி முதல் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்தப் பயிற்சியில் பங்குபற்றுவதற்காக வந்திருந்த போதே இந்தச் சந்திப்பில் இந்திய கிழக்குப் பிராந்திய கடற்படைத் தளபதி கலந்து கொண்டுள்ளார்.

திருகோணமலையில் நடைபெறும் இந்தக் கூட்டுப்பயிற்சியில் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள 6 கடற்படைக் கப்பல்களுடன் இலங்கை கடற்படையினரின் கப்பல்களும் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

No comments:

Post a Comment