Pages

Wednesday, September 21, 2011

இலங்கைக்கு பில் கிளின்டன் பாராட்டு!

Wednesday, September 21, 2011
பூகோள ஒருமைப்பாட்டு மேம்பாட்டுக்காக இலங்கையிடம் இருந்து கிடைக்கும் பங்களிப்பை வரவேற்பதாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பிள் கிளின்டன் தெரிவித்துள்ளார்.

கிளின்டன் பூகோள பிரவேசம் அமைப்பின் ஆரம்ப நிகழ்வில் நேற்று கலந்து கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி சுமூகமான முறையில் வரவேற்றுள்ளார்.

அத்துடன், சமூக ஒருமைப்பாட்டுக்கு இலங்கையிலிருந்து கிடைக்கும் பங்களிப்பிற்கு பில் கிளின்டன் தமது நன்றிகளை தெரிவித்ததாகவும், குறிப்பிடப்பட்டுள்ளது.

2005 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கிளின்டன் பூகோள ஒருமைப்பாட்டு அமைப்பின் ஊடாக 180 நாடுகளைச் சேர்ந்த சுமார் 3 ஆயிரம் மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பலதரப்பட்ட அனுகூலங்களைப் பெற்றுள்ளனர்.

ஆரம்பநிகழ்வில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி, பொருளாதார நெருக்கடி, உலகளாவிய காலநிலை அனர்த்தங்கள், உலக மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள், மற்றும் நானாவித பிரச்சினைகள் குறித்து விரிவாக கருத்து வெளியிட்டார்.

இவ்வாறான சவால்களை எதிர்கொள்வதற்கு உலகளாவிய ஒற்றுமை அத்தியாவசியம் என்ற காரணத்தையும் பில் கிளின்டன் சுட்டிக்காட்டினார்....

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனுக்கும் இடையில் நியூயோர்க்கில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பின் போது எவ்வாறான விடயங்கள் குறித்து பேசப்பட்டது என்பது பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை. மனித உரிமை மீறல், மீள் குடியேற்றம் மற்றும் நிலக்கண்ணி வெடி அகழ்வு போன்ற விடயங்கள் குறித்து பேசப்பட்டிருக்கலாம் என ஊடகங்கள் ஊகம் வெளியிட்டுள்ளன.

சர்வதேச ரீயான சவால்களை எதிர்நோக்குவதற்கு உலகத் தலைவர்களை ஒன்றிணைக்கும் நோக்கில் கிளின்டன் க்ளோபல் இனிடேடிவ் போரம் என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டது.

இலங்கையில் சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட காலத்தில் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனினால் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.

இந்த அமைப்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அங்கத்துவம் வழங்கப்பட்டுள்ளதுடன், அமைப்பின் கூட்டத்தில் ஜனாதிபதி கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment