Pages

Tuesday, September 20, 2011

யாழ்ப்பாணம் நோக்கி சென்ற தனியார் பேரூந்தில் அதிசக்தி வாய்ந்த வெடி மருந்து!

Tuesday, September 20, 2011
சீ-4 ரக அதிசக்தி வாய்ந்த வெடி மருந்து தொகையுடன் இரண்டு பேர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மொனராகலை காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மொனராகலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற தனியார் பேரூந்தை சோதனையிட்ட போது, சாரதியின் ஆசனத்திற்கு அருகில் பொதியொன்றில் இந்த வெடி மருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்தது. 615 கிராம் வெடி மருந்து பொதியில் இருந்ததாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பேரூந்து சாரதியும், நடத்துனரும் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.

No comments:

Post a Comment