Pages

Wednesday, September 21, 2011

பொத்துவில் தாரம்பலவ பிரதேசத்தில் வெடிபொருட்கள் மீட்பு!

Wednesday, September 21, 2011
பொத்துவில் தாரம்பலவ பிரதேசத்தில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், பொத்துவில் பொலிஸ் நிலைய விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போதே இவை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, நான்கு கைக்குண்டுகளும் 1 சைனட் குப்பியுமே இந்த விசேட சோதனை நடவடிக்கையின் போது மீட்கப்பட்டுள்ளதா தெரிவிக்கப்படுகிறது.

மீட்கப்பட்ட வெடிபொருட்கள் தொடர்பில் எந்தவொரு சந்தேக நபர்களும் கைது செய்யப்படவில்லை என பொத்துவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்ட வெடிபொருட்கள் தொடர்பில் பொத்துவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment