Pages

Saturday, September 10, 2011

ராஜீவ் காந்தி கொலையாளிகள் நளினியும், முருகனும் வேலூர் சிறையில் சந்திப்பு!

Saturday, September 10, 2011
ராஜீவ் காந்தி கொலையாளிகள் நளினியும், முருகனும் வேலூர் சிறையில் சந்திப்பு!

ரஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி ஸ்ரீஹரன், தனது கணவரான முருகனை இன்று வேலூர் சிறைச்சாலையில் சந்தித்துள்ளார்.
நளினி சென்றையிலிருந்து அண்மையில் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.
இந்திய ஜனாதிபதியினால் கருணை மனு நிராகரிக்கப்பட்டதன் ஒரு மாதகாலத்திற்கு பின்னர் அவர் தனது கணவரை சந்திக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்,

ஏற்கனவே இருவரும் சுமார் ஒரு வருட காலமாக சந்திக்காதிருந்தமை குறி;ப்பிடத்தக்கது.
தனது கணவரை சந்திக்க வேண்டும் என கடந்த வாரம் நளினியினால் இந்திய அரசிடம் விடுக்கப்பட்டிருந்த கோரிக்கைக்கு அமையவே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முருகன் மற்றும் நளினி உள்ளிட்ட நான்கு பேர் இந்திய உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கிணங்க 1999 சிறை சென்றனர்.

இருந்தபோதும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் கருணை அடிப்படையில், நளினியின் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டமை குறி;ப்பிடத்தக்கது.
அதனையடுத்து நளினி சிறைச்சாலையில் வைத்து பெண் குழந்தையொன்றையும் பிரசவித்திருந்தமை குறி;;ப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment