Pages

Tuesday, September 20, 2011

யாழ் நகரக் கடைகளில் கொள்ளை!

Tuesday, September 20, 2011
யாழ் நகரப் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு பத்திற்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு பல இலட்சம் ரூபா பணமும் கொள்ளையிடப்பட்டு உள்ளது.

நேற்றிரவு வழமையாக தமது வர்த்தக நிலையங்களை பூட்டிவிட்டு மறுநாள் திங்கட்கிழமை வழமை போன்று வர்த்தக நிலையங்களைத் திறக்க வந்தபோது வர்த்தக நிலையங்களின் பிரதான வாசற் கதவுகளில் பொருத்தப்பட்ட பூட்டுக்கள் அனைத்தும் உடைக்கப்பட்டு அங்கிருந்த நாணயத் தாள்கள் மற்றும் காசோலைகள் கொள்ளையர்களால் கொள்ளையிடப்பட்டு உள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் பொலிசார் வர்த்தக நிலையங்களுக்குச் சென்று கைரேகை அடையாளங்களைப் பதிவு செய்துள்ளனர்.

யாழ் நகரின் ஸ்ரான்லி வீதி, மணிக்கூட்டு வீதி போன்ற பகுதிகளிலேயே இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. மோட்டார் வாகனங்கள் விற்பனை செய்யும் வர்த்தக நிலையம், மருந்தகம், காட்வெயார், புடைவை மற்றும் அழகு சாதன விற்பனை நிலையங்களே இவ்வாறு உடைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment