Pages

Saturday, September 10, 2011

மண்முனைப்பற்று பிரதேச சபை தவிசாளர் தலைமையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!

Saturday, September 10, 2011
காத்தான்குடி பிரதேசத்தில் சேருகின்ற திண்மக் கழிவுகளை மண்முனைப்பற்று பிரதேச சபைப் பிரிவில் கொட்டும் நடவடிக்கையினை கண்டித்து மண்முனைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எஸ்.எம்.கிறிஸ்டினா தலைமையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று காலை மண்முனைப்பற்று பிரதேச சபைக்கு முன்பாக இடம்பெற்றது.

காத்தான்குடி நகரசபையின் தவிசாளரினால் பொலிசாரின் உதவியுடன் தமது நிருவாக ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசத்தில் நேற்றைய தினம் எமது அனுமதியின்றி குப்பைகளை கொட்டிவிட்டுச் சென்றதை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் இவ்வாறு கொட்டப்படுகின்ற குப்பைகள் பாலமுனையிலுள்ள முஸ்லிம் மக்கள் வாழுகின்ற பகுதியில் கொட்டப்படுவதை அப்பகுதி மக்களும், அப்பகுதியின் பொதுச் சுகாதார பரிசோதகரும் தமக்கு தொடர்ச்சியாக முறைப்பாடுகளை தெரிவித்ததர்கமைவாகவே மக்களின் நன்மை கருதி தான் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இவ்வாறு குப்பைகள் கொட்டுவதற்கு ஆறு மாதத்திற்கு தற்காலிக அனுமதியை தாம் வழங்கியதாகவும்,கடந்த இரண்டாம் திகதியுடன் அக்காலக்கெடு முடிவுற்ற நிலையில், இப்பகுதியில் நிரந்தரமாக இக்குப்பைகள் கொட்டப்படுவதால் அந்த பகுதியை சுற்றி வாழ்பவர்களுக்கு பல்வேறு நோய்கள் உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஆகியோருக்கு தான் தெரியப்படுத்தியதர்கமைவாக இன்று மாவட்ட செயலகத்தில் விசேட கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment