Pages

Saturday, September 10, 2011

ஸ்ரீபெரும்புதூரில் ராஜிவ் நினைவிடத்துக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு!

Saturday, September 10, 2011
சென்னை: சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் போலீசார் முதன்முதலில் இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். பின்னர், நினைவிட பாதுகாப்பு பணியை மத்திய தொழில் பாதுகாப்பு படை ஏற்றனர். துணை ராணுவ உதவி கமிஷனர், 3 எஸ்.ஐ., 13 ஏட்டு மற்றும் 28 போலீசார் உள்ளிட்ட 46 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். டெல்லி ஐகோர்ட்டில் நடந்த குண்டு வெடிப்பை தொடர்ந்து, நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ரயில், விமான நிலையங்கள், முக்கிய இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஸ்ரீபெரும்புதூர் ராஜிவ் நினைவிடத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் ராணுவ அதிகாரிகள் ஏஐஜி கோபிநாத், ஏசி சந்தோஷ்குமார், மத்திய முதன்மை வடிவமைப்பாளர் தக்கர், முதன்மை பொறியாளர்கள் அண்ணாமலை, மீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ராஜிவ் நினைவிடத்தில் ஏற்கனவே இருக்கும் பாதுகாப்பு படையினருடன், ஒரு எஸ்ஐ, 14 ஏட்டு மற்றும் 3 போலீசார் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர். தீவிர சோதனைக்கு பிறகே பார்வையாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

No comments:

Post a Comment