Pages

Friday, September 23, 2011

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜய் நம்பியார், லியாம் பெக்ஸுடன் சந்திப்பு!




Friday 23rd of September 2011
இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜய் நம்பியார், லியாம் பெக்ஸுடன் சந்திப்பு!

ஐக்கிய நாடுகள் சபையின் 66ஆவது பொதுக் கூட்டத்தொடரில் கலந்து கொள்ளவென நியூயோர்க் சென்றுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி லியாம் பெஸ்கோ மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கி-மூனின் மூத்த அதிகாரி விஜய் நம்பியார் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பு இன்று இடம்பெற்றதாகவும் வெளிவிவகார அமைச்சருடன் ஐநாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹெனவும் உடனிருந்ததாகவும் இன்னசிட்டி பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

லியாம் பெக்ஸுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது இலங்கையின் தற்போதையை நிலைபாட்டையும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பிலும் பீரிஸ் விளக்கமளித்ததாக லியாம் பெக்ஸை மேற்கோள்காட்டி இன்னசிட்டி பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை, விஜய் நம்பியாரை பீரிஸ் சந்தித்தாரா என்று லியாம் பெக்ஸிடம் கேட்கப்பட்டபோது சந்திப்பு நடைபெற்றதை அவர் உறுதி செய்துள்ளார்.

No comments:

Post a Comment