Pages

Monday, September 19, 2011

அமெரிக்காவில் விமான சாகசத்தில் மீண்டும் விபத்து: விமானி பலி!

Monday, September 19, 2011
அமெரிக்காவில் நவேடா மாகாணத்தில் உள்ள ரெனோ நகரில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு விமான கண்காட்சி நடந்தது. அதையொட்டி நடந்த சாகச நிகழ்ச்சியில் இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்திய விமானம் திடீரென்று தரையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. அதில் விமானி மற்றும் சாகசநிகழ்ச்சியை வேடிக்கை பார்த்த 8 பேர் பலியானார்கள். மேலும் 70 பேர் காயம் அடைந்தனர்.

இந்த நிலையில் மீண்டும் அமெரிக்காவில் விமான சாகச நிகழ்ச்சியில் விபத்து ஏற்பட்டுள்ளது.

மேற்கு வர்ஜீனியாவில் விமான சாகச நிகழ்ச்சி நடந்தது. அப்போது சாகசத்தில் ஈடுபட்ட டி-28 என்ற விமானம் ஓடுபாதையில் விழுந்து நொறுங்கியது. அதனால் விமானம் பந்து போல் “குபீர்” என தீப்பிடித்து எரிந்தது.

இந்த சாகச நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் அதிர்ச்சியில் உறைந்து கூச்சலிட்டனர். அங்குமிங்கும் சிதறி ஓடினர். விபத்தில், அந்த விமானத்தை ஓட்டிய விமானி மட்டும் பலியானார். பார்வையாளர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

விமான சாகச நிகழ்ச்சிகளில் தொடர்ந்து ஏற்பட்டுள்ள விபத்து அமெரிக்க மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment