Pages

Saturday, September 24, 2011

தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் 71 பேர் கைது!

Saturday, September 24, 2011
தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் இதுவரை 71 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 35 பேர் சட்டவிரோதமாக சுவரொட்டிகளை ஒட்டியமை தொடர்பாக கைதுசெய்யப்பட்டவர்கள் எனவும், இதுவரை தேர்தல் சட்டங்களை மீறிய 64 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், தேர்தல் பாதுகாப்புக் கடமைகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் காமினி நவரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை இதுவரையான காலப்பகுதியினுள் தமது அமைப்பிற்கு தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான 59 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக கஃபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.

தேர்தலுடன் தொடர்புடைய 38 முறைப்பாடுகள் தமக்குப் பதிவாகியுள்ளதாக தேசிய தேர்தல் கண்காணிப்பு நிலையத்தின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி ரசாங்க ஹரிஸ்சந்திர குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment