Pages

Sunday, September 25, 2011

2ம் இணைப்பு-மகாஓயா துப்பாக்கிப் பிரயோகம் - இரண்டாம் நபரும் உயிரிழப்பு!

Sunday, September 25, 2011
அம்பாறை மகாஓயா பகுதியில் இன்று காலை நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்திருந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த மற்றைய அதிகாரியும் சற்றுநேரத்திற்கு முன்னர் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிப் பிரயோகத்தில் கடுங்காயங்களுக்கு உள்ளாகி மகாஒயா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த தலைமை பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இன்று காலை துப்பாக்கி சூட்டில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரும் குறித்த தலைமை பொலிஸ் இன்ஸ்பெக்டரும் கடுங்காயங்களுக்கு உள்ளானமை குறிப்பிடத்தக்கது.

இருவரும் வைத்தியசாலயில் அனுமதிக்கப்பட்ட பின்னர்,� பொலிஸ் விசேட அதிரடிப்படையின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் முதலில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment