Pages

Sunday, August 21, 2011

சர்வதேசத்தை ஏமாற்றும் நாடகத்திற்க்கு TNAஐ அரசாங்கம் பயன்படுத்துகின்றது-இரா (புலி)சம்பந்தன் கண்டுபிடிப்பு!!!

Sunday, August 21, 2011
சர்வதேசத்தை ஏமாற்றும் நாடகத்திற்க்கு TNAஐ அரசாங்கம் பயன்படுத்துகின்றது-இரா (புலி)சம்பந்தன் கண்டுபிடிப்பு!!!

பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் பங்கேற்பது குறித்து இன்னமும் இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை என தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு கட்சி அறிவித்துள்ளது.

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் அரசாங்கத்தினால் பாராளுமன்றத் தெரிவுக்குழு யோசனைத்திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் வெற்றியீட்டிய தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு வேட்பாளர்கள் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

அரசாங்கத்துடன் பத்து சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும், கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட யோசனைத் திட்டங்களுக்கு உரிய பதிலளிக்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்கக் கூடாது என்பதே பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஏகோபித்த கருத்தாக அமைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

ஆறு மாத காலத்திற்குள் பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் மூலம் தீர்வுத் திட்டம் வழங்கப்படும் என்பதற்கு என்ன உறுதி என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேவேளை, பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்பது குறித்து இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கவில்லை என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment