இனப்பிரச்சினை தீர்வுக்காக மாத்திரம் அமைக்கப்படுவதாக கூறப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு தற்போது தேசிய ஒற்றுமைக்கான குழுவாக செயற்படப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
Sunday, August 21, 2011
இனப்பிரச்சினை தீர்வுக்காக மாத்திரம் அமைக்கப்படுவதாக கூறப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு தற்போது தேசிய ஒற்றுமைக்கான குழுவாக செயற்படப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக இந்தக்குழு தமிழர்களின் இனப்பிரச்சினை தீர்வுக்காக மாத்திரம் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
சிவ்சங்கர் மேனன் தலைமையிலான இந்திய உயர்மட்டக்குழு இலங்கைக்கு வந்தபோதும் இதனை ஜனாதிபதி வலியுறுத்தியிருந்தார்.
எனினும் தற்போது அது பரந்துப்பட்ட விடயங்களை ஆராயும் குழுவாக செயற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் இந்தக்குழு, அரசியல் மற்றும் யாப்பின் அடிப்படையில் இலங்கை ஒரு நாடு என்ற அடிப்படையில் பொதுமக்களுக்கு அதிகாரங்களை வழங்குவது தொடர்பில் தமது அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் மத்தியில் ஒற்றுமையை ஊக்குவித்தல்
பொதுமக்களுக்கு அதிகாரங்களை வழங்கல்
மற்றும் மக்கள் தீர்மானங்களை மேற்கொள்ள வழி செய்தல் போன்ற காரணங்களை இந்தக்குழு பரிந்துரைக்கவுள்ளது.
இந்தக்குழுவின் தலைவராக சபாநாயகரால் ஒருவர் பரிந்துரைக்கப்படவுள்ளார்.
அத்துடன் குழுவும் சபாநாயகரால் நியமிக்கப்படவுள்ளது.
No comments:
Post a Comment