Pages

Thursday, August 25, 2011

வேட்புமனுத் தாக்கல் நிறைவு!

Thursday, August 25, 2011
23 உள்ளூராட்சி மன்றங்களுக்காக நடைபெறவுள்ள தேர்தலின் வேட்பு மனுத்தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவுபெற்றன.

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் போட்டியிடும் பொருட்டு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்கள் இன்று முற்பகல் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தன

17 மாநகரசபைகள் ஒரு நகரசபை மற்றும் ஐந்து பிரதேசசபைகளுக்கான இந்தத் தேர்தலின் மூலம் உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.

கொழும்பு மாநகர சபைக்காக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் இன்று முற்பகல் வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த உள்ளிட்ட சிலர் இந்த சந்தர்ப்பத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.

இதேவேளை கொழும்பு மாநாகர சபைக்கான வேட்பு மனுவை ஐக்கிய தேசியக் கட்சி அதன் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தலைமையில் தாக்கல் செய்தது.

மக்கள் விடுதலை முன்னணியும், கொழும்பு மாநகர சபைக்கான வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தது.

கல்முனை மாநகர சபைக்கான வேட்பு மனுக்களை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியன இன்று ஒப்படைத்தன.

கூட்டமைப்பு சார்பில் சிரேஷ்ட அமைச்சர் பீ.தயாரத்ன உள்ளிட்ட பலர் வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர்.

No comments:

Post a Comment