Pages

Sunday, August 21, 2011

அரசாங்கத்துக்கு வீரச் சவால் விடுத்த தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு தற்போது விழுந்தவன் மீசையில் மண் படாத கதை:பெட்டிப் பாம்பாக அடங்கிக் கிடக்கிறது!

Sunday, August 21, 2011
அரசாங்கத்துக்கு வீரச் சவால் விடுத்த தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு தற்போது விழுந்தவன் மீசையில் மண் படாத கதை:பெட்டிப் பாம்பாக அடங்கிக் கிடக்கிறது!


அரசாங்கத்துக்கு வீரச் சவால் விடுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது பெட்டிப் பாம்பாக அடங்கிக் கிடக்கிறது. கடந்த 18ஆம் திகதியுடன் அரசாங்கத் திற்கு விடுத்த கால அவகாசம் முடிவடைந்ததும் தமிழ்க் (புலி)கூட்டமைப்பு தனது கலத் தைக் காட்டும் என்றே தமிழ் மக்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்தனர். ஏனெனில் அரசிற்குக் காலக்கெடு விதித்த விதமும் அச்சந்தர்ப்பத்தில் கூட்டமைப்பின் தலைவர்களிடமிருந்து வெளிக்கிளம்பிய வீர வசனங்களும் முன்னர் புலிகள் களத்தில் நின்று போராடியதை விடவும் தமிழ் மக்கள் சிலரைப் புளகாங்கிதம் அடையச் செய்தது.

தமிழ்க் (புலி)கூட்டமைப்பு விடுத்திருந்த கால அவகாசத்திற்குள் அரசாங்கம் பதிலளிக்காவிட்டால் என்ன நடக்குமோ எனும் அளவிற்குப் பயம் கலந்த உணர்வுடன் கூட்டமைப்பின் பலத் தைக் காட்டக் கிடைத்துள்ள சந்தர்ப்பம் எனவும் தமிழ் மக்களில் சிலர் எதிர்பார்த்துக் காத் திருந்தனர். ஆனால் பதினெட்டாம் திகதி கழிந்து சென்று மூன்று தினங்களாகிவிட்டது ஒன் றுமே நடக்கவில்லை.

இரண்டு வார காலத்தினுள் மாறி மாறி வீர அறிக்கைகளும், காணொளி பேட்டிகளும் வழங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் இப்போமு பெட்டிப் பாம்பாக மறைந்திருக்கி றார்கள். தமிழ் மக்களை மீண்டுமொரு தடவைமுறையாக ஏமாற்றியுள்ள கூட்டமைப்புத் தலைவர்கள் இப்போது வாய்க்கு வந்த பொய்களை வாந்தியாக எடுத்துக் கொண்டிருக்கி றார்கள். ஒருவர் கூறுகிறார் கால அவகாசம் எதனையும் தாம் விடுக்கவில்லையாம் என்று, மற்றவர் கூறுகிறார். பதில் கிடைக்கும் வரை காத்திருப்போம் என்று , இவ்வொருவர் கூறு கிறார் சம்பந்தன் ஐயா இந்தியாவிலிருந்து திரும்பியதும் அடுத்த கட்ட நடவடிக்கை என்று, மற்றுமொருவர் கூறுகிறார் இந்தியா அழைக்கிறது சென்று வந்த பின்னர் இருக்குது பாருங்கோ என்று. இதில் எதனை தமிழ் மக்கள் நம்புவது? இவையெல்லாம் அவசியம் தேவை யானதா? எனத் தமிழ் மக்கள் கேட்கிறார்கள்.

தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பையே இந்நாட்டிலுள்ள பெரும்பாலான தமிழ் மக்கள் ஆதரிக்கி றார்கள். என்பது உண்மை. அவ்வாறு தம்மை ஆதரிக்கும் தமிழ் மக்களுக்கு விசுவாசமாக நடந்து கொள்ள வேண்டியது. தமிழ்க் கூட்டமைப்பின் தலையாய கடமையும், பொறுப்புமா கும். ஆனால் இதனை அவர்கள் செய்கிறார்களா என்பது சந்தேகத்திற்குரிய விடயமே.

முன்னர் புலிகள் இருந்த காலத்திலும் புலிகளின் தலைவர் பிரபாகரன் தமிழ் மக் களை ஒரு பொருட்டாகக் கருதாமலேயே தமிழருக்காகப் போராடி வந்தார். ஒரு கட்டத் திலாவது விட்டுக் கொடுத்து நடந்திருந்தால் இன்று அவரும் இருந்திருப்பார். பல புலிக ளும் உயிர் வாழ்ந்திருப்பர். அது மட்டுமல்லாது தமிழ் மக்கள் இவ்வளவு தூரம் சீரழிந் திருக்கவும் மாட்டார்கள்.

எனவே புலிகளின் பாணியிலேயே தமிழ்க் கூட்டமைப்பும் இன்று அரசாங்கத்துடன் காய் நக ர்த்தப் பார்க்கின்றது. பத்துச் சுற்றுப் பேச்சுவார்த்தையில் பலனிலை என்றால் அதனைப் பக் குவமாக ஜனாதிபதிக்கு எடுத்துரைத்து பலனைக் கண்டிருக்க வேண்டும். அதனை விடுத்து ஏதோ யானைப் படை, குதிரைப் படை, விமானப் படை வைத்திருப்பவர்கள் போன்று அர சுடன் சவால் விடுவது ஆரோக்கியமானதல்ல. எல்லாப் படைகளையும் வைத்திருந்த புலிப் படையே இன்று முற்றாக அழிக்கப்பட்டுள்ள நிலையில் இனியும் உண்மையை, யதார்த்த த்தை தமிழ்க் கூட்டமைப்பு விளங்கிக் கொள்ளாவிட்டால் அவர்களை என்னவென்று அழை ப்பது?

தமக்கு மக்கள் படை இருப்பதாக தமிழ்க் கூட்டமைப்பிற்கு ஒரு நினைப்பு. அதுவும் புலிகளு க்கு இருந்ததுதானே. புலிகளின் ஆயுதத்திற்குப் பயந்த சிலரும், தாமாக ஆதரவு தெரி வித்த பலரும் தமிழ்ச் சமூகத்தில் புலிகளின் காலத்தில் இருந்தார்கள். ஆனால் உரிமைப் போராட்டத்தால் இருந்ததையும் இழப்போம் என்று அவர்கள் ஒருபோதும் கனவில் கூட நினைக்கவில்லை. புலிகளின் வீரத்தால் தமிbழம் மலரும் எனக் கனவு கண்டோர் புலிக ளின் பலம் புஸ் வாணமாகிப் போனதும் தமது எண்ணங்களை மாற்றிக் கொண்டார்கள்.

இந்நாட்டில் பெரும்பான்மைச் சமூகத்துடன் ஒன்றுபட்டு நாடு சுதந்திரமடைந்த காலத்தில் எவ் வாறு வாழ்ந்தோமோ அப்படி வாழ்தலே மேலானது என்பதைப் பல தமிழ் மக்களும் இன்று நன்கு உணர்ந்துள்ளார்கள். ஆனால் அரசியல் அரியாசனம் தரும் இராஜயோகம் தமிழ்க் கூட்டமைப்பு தலைவர்களுக்கு இவ்விடயத்தை விளங்கிக் கொள்ளக்கூடாது. கண்ணை மறைத்து நிற்கிறது.

எனவே இன்று சவால் விட்டு அரசாங்கம் அது பற்றிச் சிறிதுமே அலட்டிக்கொள்ளாமையினால் விழுந்தவன் மீசையில் மண் படாத கதையாக பொய்யான நொண்டிச் சாட்டுக்களைத் தெரி வித்து வரும் தமிழ்க் (புலி)கூட்டமைப்பு இனியாவது தமிழ் மக்களுக்கு உண்மையானவர்களாக நடந்து கொள்ள முனைய வேண்டும்.

அதற்காக அரசாங்கத்தின் கால்களில் தமிழ் மக்களை வீழ்ந்து கிடக்கச் சொல்வதோ அல்லது அரசிற்கு அடிமைகளாகச் சேவை செய்யுமாறு தமிழ் மக்களை வழிநடத்துவதோ அல்ல. அரசுடன் விட்டுக்கொடுப்புடனும் புரிந்துணர்வுடனும் பேச்சுவார்த்தை நடத்தி தமிழ் மக்க ளுக்கு அவர்கள் ஏற்றுக்கொள்ளும் ஒரு நியாயமான தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண் டும்.

இந்நாட்டில் தலைநிமிர்ந்து வாழப் புலிகள் மூலமாகத் தமக்குத் தீர்வு கிடைக்கும் என எதிர் பார்த்த தமிழ் மக்கள் இன்று நிர்க்கதியாக நிற்பதனால் அவர்கள் முன்பாகவுள்ள இரண்டு தெரிவில் தமிழ்க் கூட்டமைப்பிற்கே முதலிடம் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. தமிழ்க் கூட்டமைப்பு தொடர்ந்தும் தனது ஏமாற்று வித்தையைக் காட்ட முனைந்தால் அம் மக்கள் நேரடியாகவே அரசுடன் பேசி அரசு வழங்கும் ஒரு நியாயமான தீர்வை ஏற்றுக் கொள்ளும் சூழலுக்கு வரவேண்டியேற்படும்.

தமிழ் அரசியல்வாதிகளைப் புறந்தள்ளிவிட்டு தமிழ்ச் சமூகத்திலுள்ள புத்திஜீவிகள், கல்வி மான்களைக் கொண்ட ஒரு அமைப்பை உருவாக்கி அவர்கள் மூலமாகத் தீர்வைக் காண அரசாங்கம் முற்பட்டால் இன்றைய சூழலில் தமிழ் மக்கள் அதனை நிச்சயம் வரவேற்பர். அதற்கு அரசாங்கம் தமிழ் மக்களால் முற்று முழுதான மனதுடன் ஏற்றுக்கொள்ளும் கறை கள் எதுவும் படியாத தமிழ் புத்திஜீவிகளையும், கல்விமான்களையும் தெரிவு செய்ய வேண் டும். அதில் துளியளவும் அரசியல் சாயம் இருக்கக் கூடாது. இல்லையேல் பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காக மாறிய கதையாக முடிந்துவிடும்.

இவ்விடயங்களைக் கருத்திற் கொண்டு தமிழ் (புலி)கூட்டமைப்பு இனியும் காலத்தைக் கடத்தாது ஆக்கபூர்வமான செயற்பாடுகளில் இறங்க வேண்டும். இல்லையேல் தமிழ் மக்கள் உங் களை இறக்கி வைத்து விடுவார்கள். பின்னர் சலுகைகளுக்கும், சொகுசு வாழ்க்கைக்கும் என்ன செய்வீர்கள்?

No comments:

Post a Comment