Sunday, August 21, 2011

ஆக்ஸ்போர்ட் டிக்ஷனரியில் ரீட்விட், செக்ஸ்டிங் புது வார்த்தைகள்!!

Sunday, August 21, 2011
லண்டன்: ரீட்விட், செக்ஸ்டிங், ஊட்... இதுபோன்ற 400 புது வார்த்தைகள் ஆக்ஸ்போர்ட் டிக்ஷனரியில் இடம்பெற்றுள்ளன. அறிவியல் வளர்ச்சியால் புதுப்புது வார்த்தைகளை மக்கள் இப்போது பயன்படுத்தி வருகின்றனர். அவற்றையும் சேர்த்து ஆக்ஸ்போர்ட் அகராதி வெளியிடப்பட்டுள்ளது.

இதில் கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் வார்த்தைகள்தான் அதிகமாக சேர்ந்துள்ளன. குறிப்பாக ரீட்விட் என்ற வார்த்தைக்கு, டிவிட்டர் குறுந்செய்திகளை மீண்டும் அனுப்பு அல்லது வேறு ஒருவருக்கு அனுப்பு என்று பொருள் தரப்பட்டுள்ளது. அதேபோல், செக்ஸ்டிங் என்ற வார்த்தைக்கு, ஆபாச மெசேஜ் அல்லது படங்களை அனுப்புதல் என்று பொருள் தரப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment