Pages

Wednesday, August 24, 2011

வட கொரியாவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையில் அணுத்திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தை!

Wednesday, August 24, 2011
வட கொரியாவும் ரஷ்யாவும் அணுத்திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சந்திப்பில் வட கொரிய தலைவர் கிம் ஜொங் இல் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி டிமித்ரி மெட்வெடேவ் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

ஆறு நாடுகளுக்கு இடையிலான அணுத்திட்டப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பது குறித்து இந்த சந்திப்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பொருளாதார ஒத்துழைப்புக்கள் தொடர்பில் இரண்டு நாடுகளின் தலைவர்களும் கலந்துரையாடுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

அணுத்திட்டப் பேச்சுவார்த்தைகளிலிருந்து வட கொரிய விலகியதையடுத்து ஆறு நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.

No comments:

Post a Comment