Pages

Thursday, August 25, 2011

சர்வதேச சமூகத்தின் கோரிக்கைகள் நியாயமற்றவை – அரசாங்கம்!

Thursday, August 25, 2011
சர்வதேச சமூகத்தின் கோரிக்கைகள் நியாயமற்றவை என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

யுத்தத்தின் பின்னர் நாட்டின் நிலைமைகள் முழுமையாக மாற்றமடைய வேண்டும் என்ற சர்வதேச சமூகத்தின் கோரிக்கை நியாயமற்றது என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

இதே விதமான சூழ்நிலையை எதிர்நோக்கிய ஏனைய நாடுகளில் சுமூக நிலைமை ஏற்பட பல ஆண்டுகள் கடந்ததாகத் தெரிவித்துள்ளார்.

ஸ்பெய்ன், கம்போடியா மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளில் சுமூக நிலைமை ஏற்பட பல ஆண்டுகள் கடந்ததாகவும், சில நாடுகளில் சமூக நிலைமை ஏற்பட அரை நூற்றாண்டு காலம் தேவைப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், யுத்தம் நிறைவடைந்து இரண்டாண்டுகளிலேயே இலங்கையில் பாரியளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தின் பின்னரான இலங்கையிடம் சர்வதேச சமூகம் நியாயமற்ற கோரிக்கைகளை விடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச சட்டங்கள் அமுல்படுத்தப்படுகின்றதா என்பதனை கண்காணிக்கும் போது உள்நாட்டு பொறிமுறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment