Pages

Tuesday, August 23, 2011

இலங்கை தமிழர் பிரச்சினையை நான் தீர்த்து வைக்கிறேன்; திருப்பூரில் சுப்பிரமணிய சுவாமி பேட்டி!

Tuesday, August 23, 2011
திருப்பூரில் கிருஷ்ண ஜெயந்தி விழா பொதுக் கூட்டத்தில் பங்கேற்க சுப்பிரமணியசுவாமி திருப்பூர் வந்தார்.அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாட்டில் ஊழல் அதிகமாகி யூ.பி.ஏ கூட்டணியில் உள்ள பலர் திகார் ஜெயிலில் தான் இருக்கிறார்கள்.ஜன லோக்பால் மசோதாவில் ஒரு சுதந்திரமான விசாரணை கமிசன் அமைக்கப்படும் என்கிற ஒரு விஷயத்தை மட்டும் நான் ஆதரிக்கிறேன். நான் முஸ்லிம்களை சகோதரர்களாக ஏற்றுக் கொள்ள தயார்.

ஆனால் அவர்கள் தங்களது முன்னோர்கள் இந்துக்கள் தான் என்று ஒத்துக்கொள்ள வேண்டும். ராஜீவ் காந்தியை கொன்றவர்கள் இன்று கருணை மனு போடுகிறார்கள்.கொலைகாரர்களுக்கு எதற்கு கருணை காட்ட வேண்டும். இலங்கை தமிழர்கள் பிரச்சினையை நான் மட்டுமே தீர்த்து வைக்க முடியும்.

ஆனால் வைகோ, நெடுமாறன், சீமான் உள்ளிட்டவர்கள் தாங்கள் தோற்று விட்டதாக ஒப்புக்கொள்ள வேண்டும்.அவ்வாறு ஒப்புக்கொண்டால் நான் இலங்கை அதிபரை சந்திப்பேன். பிறகு சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று இலங்கை அரசியலமைப்பை மாற்றி தமிழர்கள் சுயாட்சி பெற ஏற்பாடு செய்வேன்.

இல்லையென்றால் நான் செய்த பிறகு இவர்கள் செய்ததாக கூறுவார்கள். ஏற்கனவே முல்லை பெரியாறு பிரச்சினையில் 6 ஆண்டுகள் வழக்கு நடத்தி நீர்மட்டத்தை உயர்த்த செய்தேன்.ஆனால் இவர்கள் செய்ததாக சொல்லிக்கொண்டார்கள்.

எனவே இவர்கள் தோற்று விட்டதாக ஒப்புக்கொண்டால் நான் இலங்கை தமிழர்கள் பிரச்சினையை தீர்த்து வைக்கிறேன். திருப்பூரில் கிருஷ்ணன் ஜெயந்தி விழா நடத்திய வி.எச்.பி. தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமொழி மீது எஸ்.பி.உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து விஷ்வ இந்து பரிஷத் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி நிறைவு விழா பொதுக்கூட்டம், நடந்தது. கோட்ட தலைவர் நாச்சிமுத்து தலைமை வகித்தார். சுப்பிர மணியசாமி, மாநில துணை செயலாளர் வேதாந்தம் உள்பட பலர் பேசினர். கூட்டத்தில் மாவட்ட தலைவர் நாச்சிமுத்து, குகப்பிரியா சுவாமினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment