Saturday, August 20, 2011
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 68-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சத்திய மூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தலைமையில் ராஜீவ்காந்தி பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.சைதாப்பேட்டையில் உள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார்.
பின்னர் காமராஜர் அரங்கத்தில் நடந்த விழாவில் காங்கிரஸ் அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவ-மாணவிளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கினார்.
கார்த்தி ப.சிதம்பரம் தலைமையில் ஏராளமான காங்கிரசார் சைதாப்பேட்டை ராஜீவ்காந்தி சிலைக்கு மாலை அணிவித்தனர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் யசோதா, செல்வப் பெருந்தகை, முன்னாள் துணைமேயர் கராத்தே தியாகராஜன், முன்னாள் எம்.பி., வள்ளல்பெருமான், நிர்வாகிகள் சிரஞ்சீவி, ஓய்.வி.ஆர்.ராஜூ, தி.நகர் ஸ்ரீராம், சாதிக், வில்லியம்ஸ், ஆதி ஜான்சன், விஜயசேகர், நாச்சிகுளம் சரவணன், சேத்துப்பட்டு ரமேஷ், சோமநாதன். கவுன்சிலர்கள் வனஜா, சாந்தி மற்றும் துறைமுகம் ரவிராஜ், நிலவன், ஆதவன் கிஷோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இது போல நகரின் பல்வேறு பகுதிளில் ராஜீவ் காந்தி பிறந்த நாளை காங்கிரசார் கொண்டாடினார்கள்.முன்னாள் மத்திய மந்திரி திருநாவுக்கரசர் திருச்சியில் ராஜீவ்காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார்.
ஆலந்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா ஆதம்பாக்கம் கட்சி அலுவலகத்தில் நடந்தது. ராஜீவ் காந்தி படத்துக்கு பொருளாளர் என்.சீதாபதி, மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் காஞ்சி மாவட்ட பொதுச் செயலாளர் குமார், செயலாளர் வடிவேலு, கனிபாண்டியன், விஜய நாதன், பழனிசாமி, பொதுச் செயலாளர் அனல் சிட்டிபாபு, காமராஜ், தண்ட பாணி, அமுதா, ராஜ பாண்டியன் கலந்து கொண்டனர்.
124-வது வட்ட காங்கிரஸ் சார்பில் மேற்கு மாம்பலத்தில் ராஜீவ் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. நாச்சி குளம் சரவணன் தலைமை தாங்கினார். மாம்பலம் ராஜேந்திரன் இனிப்பு வழங்கினார். இதில் அபுபக்கர், கண்ணன் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment