Pages

Wednesday, August 24, 2011

புத்தளம் காவல்துறை உத்தியோகத்தரின் கொலைசம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட 20 பேரை கைது!

Wednesday, August 24, 2011
புத்தளம் காவல்துறை உத்தியோகத்தரின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 20பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடந்த ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் நடத்திய தாக்குதல்களில் நவரட்ன பண்டார என்னும் காவல்துறை உத்தியோகத்தர் கொல்லப்பட்டார்.

இந்தத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட 20 பேரை கைது செய்துள்ளதாக புலனாய்வுப் பிரிவினரும், புத்தளம் காவல்துறையினரும் அறிவித்துள்ளனர்.

தாக்குதல் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட கல்கடாஸ் ரக துப்பாக்கியும் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த துப்பாக்கி பிரதேச கிராம உத்தியோக்தர் ஒருவரின் சகோதரருக்கு சொந்தமானது எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சிலரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

அப்பாவி ஒருவரை கிறிஸ் பூதம் எனக் கருதி சிலர் தாக்குதல் நடத்தியதாகவும், அதனை தடுக்க முற்பட்ட காவல்துறை உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் நேரில் கண்ட சாட்சியங்கள் தெரிவித்துள்ளன.

தம்மைக் கொலை செய்ய வேண்டாம் என காவல்துறை உத்தியோகத்தர் மன்றாடிய போதிலும், குறித்த அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்த கும்பல் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

No comments:

Post a Comment