Wednesday, August 24, 2011
நிறைவுற்றிருக்கும் நிலையில் இராணுவத்தின் பாவனைக்கென 14 ஹெலிகொப்டர்களை அரசாங்கம் ரஷ்யாவிடமிருந்து கடன் அடிப்படையில்
கொள்வனவு செய்திருப்பதாக தெரிவித்திருக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி யுத்தத்துக்குப் பின்னர் மக்களின் எதிர்பார்ப்புகள் எதனையும் நிறைவேற்றத் தவறிய அரசுக்கு ஹெலிகொப்டர் விமானங்களை கொள்வனவு செய்ய என்ன அவசரம் ஏற்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஐக்கிய தேசியக் கட்சி பொதுச் செயலாளரும்,பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்த நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
யுத்தம் இடம்பெறாத 2011 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு பாதுகாப்புச் செலவினமாக கடந்த வரவு செலவுத் திட்டத்தின்போது 215 பில்லியன் ரூபாவை அரசு ஒதுக்கியது. 2012 ஆம் ஆண்டில் அதைவிடக் கூடுதலான நிதியை ஒதுக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அறியவந்துள்ளதாகவும் திஸ்ஸ அத்த நாயக்க சுட்டிக்காட்டினார்.
அவர் செய்தியாளர் மாநாட்டில் மேலும் விளக்கமளிக்கையில் தெரிவித்ததாவது;
அரசாங்கத்தின் பாவனைக்கென ரஷ்யாவிடமிருந்து 14 ஹெலிகொப்டர் விமானங்கள் அவசரமாகக் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. யுத்தமொன்று இடம்பெறாத நிலையில் இராணுவத்துக்கென 14 ஹெலிகொப்டர்களை கொள்வனவு செய்ய வேண்டிய அவசரம் என்னவெனக் கேட்கின்றோம்.
யுத்தம் முடிவுக்கு வந்து இரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையில் மக்களின் எதிர்பார்ப்புகள் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை.வாழ்க்கைச் செலவு அதிகரிப்பைக் கட்டுப்படுத்த எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.அரசு ஊழியர்களுக்கு தேர்தல் காலத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கமைய அவர்களது சம்பளத்தை அதிகரிக்க இன்று வரை எதுவும் செய்யப்படவில்லை. நாட்டில் இன்று சட்டமும் ஒழுங்கும் சீர்குலைந்து போயுள்ளது. மறைமுகமான அச்சுறுத்தல்கள் காரணமாக மக்கள் அச்சத்தால் வாய்திறக்கப் பயப்படுகின்றனர்.
அதே சமயம் 2011 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரசு பாதுகாப்புச் செலவினத்துக்காக 215 பில்லியன் ரூபாவை ஒதுக்கியது. அது யுத்தமில்லாத அமைதி ஏற்பட்ட காலத்தில் இடம்பெற்றுள்ளது. பாதுகாப்புச் செலவுக்கு இவ்வளவு பெரும் தொகைப் பணம் எதற்காக எனக்கேள்வி எழுப்புகின்றோம். எதிர்வரும் நவம்பரில் சமர்ப்பிக்கப்படவிருக்கும் 2012 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்திலும் இவ்வாறு பெரும்தொகைப் பணம் பாதுகாப்புகாக ஒதுக்கப்படவிருப்பதாக அறியவருகின்றோம்.
இதனிடையே தான் ரஷ்யாவின் ரொஸ்பறி எக்ஸ்போர்ட் நிறுனவத்திடமிருந்து குறுகிய காலக் கடன் அடிப்படையில் எம்.ஐ.171 ரக 14 ஹெலிகொப்டர் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. நாட்டு மக்கள் பெரும் கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் நிலையில் அரச தலைவர்களின் சுகபோக பயணத்துக்கே இந்த ஹெலிகொப்டர்கள் கொள்வனவு செய்யப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
இதேசமயம் பாதுகாப்புத் தரப்பு உயரதிகாரி ஒருவர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்திருக்கிறார். முதலில் நாட்டின் எல்லைகளை பாதுகாக்கும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு இவை கொள்வனவு செய்யப்படுவதாக தெரிவித்திருந்தார். பின்னர் முக்கிய பிரமுகர்களின் பயணங்களுக்குப் பயன்படுத்த கொள்வனவு செய்யப்பட்டதாக கூறினார். கடைசியாக நாட்டின் பின் தங்கிய பகுதிகளுக்கு அவசர உணவு,மருந்துகளை எடுத்துச் செல்வதற்காக எனக் கூறியுள்ளார். இதில் எது உண்மை என்பது புரியவில்லை. நாம் சொல்கிறோம் மூன்றுமே பொய். ஆட்சித் தலைவர்களின் உல்லாசப் பயணங்களுக்கே மக்கள் பணத்தை அள்ளிக் கொட்டி மக்களை கடனாளியாக்க இந்த விமானங்களை கொள்வனவு செய்துள்ளனர்.
2010 வரவுசெலவுத் திட்டத்திலும் நாட்டு மக்களுக்கு எந்த வித நிவாரணமோ சலுகைகளோ கிட்டப்போவதில்லை.ஏனெனில் அந்தளவுக்கு அராசாங்கம் வெளிநாட்டில் கடன்பட்டுள்ளது. இந்தக் கடன்களை கட்டுவதற்கு மக்கள் மீதுதான் வரிச்சுமை ஏற்றப்படவுள்ளது.
நாட்டின் பொருளாதார அபிவிருத்தி தொடர்பாக வெளியிடப்படும் அறிக்கைகள் போலியானவையாகும். நாட்டின் பொருளாதார முன்னேற்றம் என்பது அதிகாரிகளின் அறிக்கைகளோடு மட்டுப்படுத்தப்பட்டதொன்றாகும் எனவும் திஸ்ஸ அத்த நாயக்க ஊடகவியலாளர்களிடம் பிரஸ்தாபித்தார்.
No comments:
Post a Comment