Pages

Wednesday, July 20, 2011

ஆசிரியை மீது பெட்ரலை ஊற்றி எரியூட்டிய இராணுவச் சிப்பாய் கைது!

Wednesday, July 20, 2011
ஹப்புத்தளை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் பணியாற்றி வரும் ஆசிரியை ஒருவர் மீது பெட்ரலை ஊற்றி எரியூட்டிய இராணுவச் சிப்பாய் ஒருவர் ஹப்புத்தளை காவற்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் கடும் தீகாயங்களுக்கு உள்ளான ஆசிரியை தியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான இராணுவ சிப்பாய் ஆசிரியையின் கையடக்க தொலைபேசிக்கு அழைப்பு எடுத்திருந்தாகவும் அவர் அடிக்கடி தொலைபேசியில் தொடர்புக்கொண்டு, ஆசிரியையுடன் காதல் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டதாகவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த விடயம் இராணுவச்சிப்பாயின் மனைவிக்கு தெரியவந்ததை அடுத்து, அவர் சிப்பாயுடன் அடிக்கடி தகறாறு செய்து வந்துள்ளார்.

இந்த நிலையி;ல், ஆசிரியை அவர் தங்கியிருந்தத இடத்தில் இருந்து, பாடசாலை நோக்கி சென்றுக்கொண்டிருந்த போது, வழியில் காத்திருந்த இராணுவச் சிப்பாய், ஆசிரியையின் உடலில் பெட்ரோலை ஊற்றி தீவைத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட சிப்பாய் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.

No comments:

Post a Comment