Pages

Wednesday, July 15, 2015

ரணில் கையில் ஆட்சியை கொடுத்தால் நாட்டை புலிகளின் காலனித்துவ நாடாக மாற்றிவிடுவார்: விமல் வீரவன்ச!

Wednesday, July 15, 2015      
நல்லாட்சி என்ற பெயரில் நாட்டைப் பிரிக்கும் வேலையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செய்து வருகிறார். மீண்டும் ரணில் கையில் ஆட்சியை கொடுத்தால் நாட்டை புலிகளின் காலனித்துவ நாடாக மாற்றிவிடுவார் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி யின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
 
அவர் மேலும் கூறுகையில், வெற்றிக் கனவில் இருக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இம்முறை தோல்வியை தாங்கிக்கொள்ள முடியாது போயுள்ளது. அதற்கு காரணமும் உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக தோல்வியில் சலித்துப் போயிருந்த ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்கு திடீரென எதிர்பாராது கிடைத்த வெற்றியினால் தாம் என்ன செய்வது என்பது அறியாது திகைத்துப் போயுள்ளனர்.
 
தமக்கு கிடைத்துள்ள அமைச்சுப் பதவிகள் மூலம் உச்சகட்ட பயனை அடைகின்றனரே தவிர நாட்டுக்கும் மக்களுக்கும் எவ்வித நன்மைகளும் கிடைக்கவில்லை. ஆகவே கிடைத்திருக்கும் சுகபோக வாழ்க்கையை உடனே இழந்துவிடக்கூடாது என்பதற்காக அரச உடைமைகளையும் சொத்துக்களையும் பயன்படுத்தி ஆட்சியை தக்கவைக்கும் முயற்சிகளை எடுத்து வருகின்றனர். எம்மை விமர்சித்துக் கொண்டே ஐக்கிய தேசியக் கட்சியினர் ஜனநாயகத்தையும், சட்டதிட்டங்களையும் மீறுகின்றனர்.
 
என்ன செய்தேனும் ஆட்சியை கைப்பற்றலாம் என ஐக்கிய தேசியக்
கட்சி காணும் பகல் கனவுக்கு நாம் இம்முறை முற்றுப்புள்ளி வைப்போம். ஐக்கிய தேசியக் கட்சியின் தோல்வியை தடுக்க முடியாது. ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஐக்-கிய தேசியக் கட்சியின் நூறுநாள் வேலைத்திட்டமும் அதன் பின்னரான இரண்டு மாதகாலமும் மக்களை முழுமையாக ஏமாற்றி விட்டது. இந்த 180 நாட்கள் வெறுமனே வீணடிக்கப்பட்ட நாட்களாகவே மக்கள் உண-ருகின்றனர். அதேபோல் நாம் வென்றெடுத்த சமாதானம், தேசியப் பாதுகாப்பு ஆகியவை ஐக்கிய தேசியக் கட்சியின் ஆறு மாதகால ஆட்சியில் சிதைவடைக்கப் பட்டுள்ளது.
 
வடக்கில் மீண்டும் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது, தேசிய பொருளாதார மட்டம் வீழ்ச்சி கண்டுள்ளது, நல்லாட்சி என்று வாய்கிழியப் பேசுகின்றனர். ஆனால் இந்த ஆறு மாதகாலத்தில் இலங்கைக்கு கொண்டு வந்திருக்கும் போதைப்பொருளின் அளவு கடந்த ஆண்டில் முழுமையாக அந்த ஆண்டில் கொண்டு வந்ததை விடவும் இரண்டு மடங்கு அதிகமாகும். இவ்வாறான நிலையில் தொடர்ந்தும் ரணில் கையில் ஆட்சியை கொடுத்தால் இந்த நாடு மிகவும் மோசமான விளைவுகளை சந்திக்கவேண்டி வரும்.
 
மேற்கு உலக நாடுகளும் புலிகள் அமைப்பும் தமது காலனித்துவ நாடாக இலங்கையை மாற்றிவிடும் நிலையும் ஏற்படும். ஆகவே நாட்டில் மாற்றம் ஒன்றை ஏற்படுத்தி நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்ல மக்களுக்கு கிடைத்திருக்கும் இறுதி சந்தர்ப்பம் இதுவாகும். இதை தவறவிட்டால் மீண்டும் நாடு பாரிய விளைவுகளுக்கு முகம் கொடுக்க வேண்டிவரும் என்பதை மக்கள் மறந்துவிட வேண்டாம்.
 
கடந்த 2001 ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த போது விடுதலைப் புலிகளை ஆதரித்தார். அதன் விளைவு அவரை ஆதரித்த மக்களே அவரை தோற்கடித்தனர். இம்முறை சர்வதேச புலிகள் அமைப்புகளுடன் ஐக்கிய தேசியக் கட்சி உடன்படிக்கைகளை செய்துள்ளது. 2001 இல் பிரதமருக்கான அதிகாரங்கள் எதுவும் இருக்கவில்லை, நிறைவேற்று ஜனாதிபதியின் கையில் அதிகாரம் இருந்த நிலையில் ரணில் புலிகளுடன் உடன்படிக்கை செய்துகொண்டார். அதிகாரம் இல்லாத போதே அவர் பிரிவினையை ஆதரிக்கும் தலைவராக செயற்பட்டார்.
 
இப்போது பிரதமர் நாட்டின் அதிகாரம் மிக்க நபர். இந்த நிலையில் ரணிலிடம் அதிகாரம் வழங்கப்பட்டால் நிலைமை என்னவாகும் என்பதை சிந்தித்துப்பார்க்க வேண்டும். ஆகவே ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரிக்கும் மக்கள் புலிகளை ஆதரிக்கின்றீர்களா என்பதை இம்முறை தேர்தலின் மூலம் வெளிப்படுத்துங்கள் எனக் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment