Pages

Thursday, June 4, 2015

மணிப்பூரில் தீவிரவாதிகள் தாக்குதல்: 10 ராணுவத்தினர் பலி 12 பேர் படுகாயம்!

Thursday, June 04, 2015
இம்பால்:மணிப்பூரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 ராணுவத்தினர் பலியானதுடன், மேலும் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று காலை 8.30 மணியளவில் அம்மாநிலத்தின் மோதுல் நகரிலிருந்து இம்பால் நோக்கி ராணுவத்தினர் பயணம் செய்த வாகனம் சாண்டல் மாவட்டம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள், திடீரென ராணுவத்தினரை சுற்றிவளைத்து கடும் தாக்குதல் நடத்தினர். இதில் 10 ராணுவத்தினர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் படுகாயமடைந்த 12 பேர், அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அம்மாவட்டத்தில், ராணுவத்தினரால் பெண் ஒருவர் கொல்லப்பட்டதையடுத்து, நேற்று அம்மாவட்டம் முழுவதும் கடையடைப்பு நடைபெற்றது. அதற்கு பழிவாங்கும் விதமாக இத்தாக்குதல் நடத்தப்பட்டதா என இதுவரை எத்தகவலும் இல்லை.

No comments:

Post a Comment