Friday, December 05, 2014
இலங்கை::ஜனாதிபதித் தேர்தலுக்கு வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கு இன்னும் மூன்று தினங்கள் இருக்கும் நிலையில் தேர்தல் பிரசாரங்கள் சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கின்றன.
இலங்கை::ஜனாதிபதித் தேர்தலுக்கு வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கு இன்னும் மூன்று தினங்கள் இருக்கும் நிலையில் தேர்தல் பிரசாரங்கள் சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கின்றன.
கடந்த 10 வருட காலத்தில் நாடு அடைந்த முன்னேற்றம் மற்றும் அபிவி ருத்திகளை தெளிவுபடுத்தும் களமாக ஐ.ம.சு.மு. தனது பிரசாரங்களை முன்னெடுக்கிறது.
நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்து பாராளுமன்றத்துக்கு அதிகாரத்தை வழங்குவோமென்ற வெற்றுக் கோஷத்தை முன்வைத்து எதிரணி தனது பரப்புரைகளில் ஈடுபட்டு வருகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதே தனது நிலைப்பாடு என்று ஏற்கனவே அறிவித்திருக்கிறது. ஆனால் அதனை முன்னெடுப்பதற்கான சூழ்நிலை குறித்து சிந்தித்துச் செயற் பட வேண்டியிருக்கிறதென கூறுகிறது. ஆனால் எதிரணியைப் பொறு த்தளவில் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை ஒழிப் பது தொடர்பில் முரண்பாடான கருத்துக்களையே முன்வைப்பதை அவதானிக்க முடிகின்றது.
தான் ஜனாதிபதியானதும் ரணில் விக்கிரமசிங்கவை நிறைவேற்று அதி காரமுள்ள பிரதமராக்குவதாக மைத்திரிபால சிறிசேன அறிவித்து ள்ளார். இதனையே மேடைகளிலும் பேசி வருகிறார். இது அரசியல மைப்புக்கு உட்பட்ட செயற்பாடு அல்ல. இதனை அரசியலமைப்பின் 37 ஆவது சரத்து மிகவும் தெளிவாகக் கூறியிருப்பதாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுபவரின் அதிகாரம் இன்னொருவ ருக்குக் கைமாறுவதாக இருந்தால், தெரிவு செய்யப்பட்டவர் சுகவீனம் அடைய வேண்டும். அல்லது நாட்டை விட்டுத் தப்பியோட வேண்டும்” இந்த நிலை ஏற்பட்டாலே தெரிவு செய்யப்பட்ட ஒருவரின் அதிகாரத்தை இன்னொருவருக்கு மாற்ற முடியும். அதுவும் விரும்பிய ஒருவருக்கு அதிகாரத்தைக் கைமாற முடியாது.
எப்படியானதொரு நிலையிலும் அரசியலமைப்பில் சொல்லப்பட்டுள்ள பதவி வழி ஒழுங்கின் பிரகாரமே ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப் பட்டவரின் அதிகாரத்தை இன்னொருவருக்கு மாற்ற முடியும்.
இதன்படி பார்த்தால் மைத்திரிபால சிறிசேன தனது அதிகாரத்தை எவ்வகையிலும் ரணில் விக்கிரம சிங்கவுக்கு வழங்க முடியாது. அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகார த்தை பிரதமராக இருக்கின்ற ஒருவருக்கே கைமாற முடியும். இதற் கமைய இப்போது பிரதமராக இருக்கின்ற தி.மு. ஜயரட்னவுக்கே மைத்திரிபால சிறிசேன அதிகாரத்தைக் கையளிக்கலாம். ஒருவேளை பிரதமர் தி.மு.ஜயரட்ன அதனை ஏற்க மறுத்தால் அடுத்து சபாநாயகருக்கே அந்த அதிகாரத்தை வழங்க முடியும். அப் பொழுதும் ராஜபக்ஷ ஒருவரே ஜனாதிபதிக்குரிய அதிகாரத்தைப் பெறுவார்.
இந்த பதவிவழி ஒழுங்கு முறை (ஜிrotoணீol) தெரிந்திருந்தும் ரணில் விக்கிரமசிங்கவை நிறைவேற்று அதிகாரமுள்ள பிரதமராக்கலாம் என மைத்திரிபால சிறிசேனவும் சந்திரிகாவும் கூறுவது ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களை ஏமாற்றும் தந்திரோபாயமாகும்.
உண்மையில், நிறைவேற்று அதிகாரத்தை நினைத்தபடி வேறொருவருக்கு கைமாற்ற முடியாது. ஜே.ஆர். ஜயவர்தன தனது அரசியலமைப்பில் இதனைத்தான் செய்து வைத்திருக்கிறார்.
அடிப்படையில் அரசியலமைப்பில் மாற்றம் செய்யப்பட்டாலே இதற்கான தீர்வைப் பெற முடியுமே தவிர, ரணில் - சந்திரிகா - மைத்திரி கூட்டின் மூலம் எதனையும் செய்துவிட முடியாது.
இந்த இடத்தில்தான் புதிய அரசியலமைப்பொன்றின் அவசியம் உணரப்படுகிறது. இதற்காக அரசாங்கம் தயார் நிலையில் இருக்கிறது. பாராளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்பட்டு கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க. அதற்கு இன்னும் வரவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்காததை காரணம் காட்டி ஐ.தே.க. இப்படி செயற்படுவது நாட்டையும் நாட்டு மக்களையும் கவனத்தில் கொள்ளாத செயற்பாடாகும்.
சகல தரப்பினரும் ஒத்துழைத்தாலே அரசியலமைப்பினை மாற்ற முடியும். மேடைகளிலும் ஊடகங்களிலும் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க வேண்டும். அரசியல் யாப்பை மாற்ற வேண்டுமென கோஷம் எழுப்பும் எதிர்க்கட்சியினர் தெரிவுக்குழுவில் தங்களது யோசனை களை முன்வைக்காதது ஏன்? அரசியலமைப்பில் சில பாதகமான சரத்துக்களும் இருக்கின்றன.
நடைமுறையிலுள்ள விகிதாசாரத் தேர் தல் முறை இதற்கு நல்லதொரு உதாரணம். சிறுபான்மையினருக்கு இந்த தேர்தல் முறை ஓரளவு சாதகமாக இருந்தாலும் கட்சிகளுக்கு ள்ளேயே மோதல்கள் உருவாகவும் வன்முறைகள் தோன்றவும் காரண மாக இருக்கிறது. இதனைத் தவிர்க்கும் வகையில் தேர்தல் மறு சீரமைப்புக் குழுவும் அரசாங்கத்தினால் செயற்படுத்தப்பட்டு வரு கிறது.
அரசியலமைப்பு மாற்றத்தையும் நிறைவேற்று அதிகார முறை ஒழிப் பையும் தேர்தலுக்கான யுக்திகளாக எதிர்க்கட்சி பயன்படுத்துகிறது. தேர்தலுக்கு அறிவிப்பு விடுக்கப்பட்ட நிலையில் அரசியலமைப்பு திருத்தத்துக்கு சாத்தியமே இல்லை. ஆகவே, நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பது தொடர்பில் முரண் பாடான கருத்துக்களைக் கூறி மைத்திரிபால சிறிசேன நாட்டின் ஸ்திரத்தன்மையை குழப்ப முயன்றாலும் மக்கள் சக்தி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனேயே இருக்கிறதென்பதை ஜனவரி 8 ஆம் திகதி தேர்தல் உறுதி செய்யும்

No comments:
Post a Comment