Pages

Thursday, May 1, 2014

புலிகளின் தனித் தமிழ் ஈழத்தினை உருவாக்கும் நோக்கிலேயே ஜெனிவா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது: விமல் வீரவன்ச!

Thursday,May,01,2014
இலங்கை::
புலிகளின்
தனித் தமிழ் ஈழத்தினை உருவாக்கும் நோக்கிலேயே ஜெனிவா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழீழ பிரிவினையினை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? என்பதை எதிர்க்கட்சிகள் திட்டவட்டமாக தெரிவிக்க வேண்டும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
 
இலங்கை விடயத்தில் தலையிடும் உரிமை இந்தியாவிற்கு இல்லை. பிரிவினை பற்றி யார் பேசினாலும் வடக்கு, கிழக்கை பிரிக்க ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தேசிய சுதந்திர முன்னணியினால் நேற்று கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்..
 
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இராணுவ அடக்கு முறைகளோ, யுத்த குற்றங்கள் தொடர்பிலோ விசாரணைகள் இடம்பெற வேண்டும் என்பதற்காக ஜெனிவா தீர்மானங்கள் கொண்டு வரப்படவில்லை. ஆயுத முனையில் முயற்சித்து தமிழ் ஈழம் உருவாக்கப்படாமல் போனமைக்கு பழி தீர்க்கவும் வடக்கு, கிழக்கினை தனி ஈழ நாடாக மாற்றி தனி ஆட்சிப் பகுதியாக மாற்றவுமே இன்று ஜெனிவா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment