Sunday, April 27, 2014
இலங்கை::ஐக்கிய நாடுகள் அமைப்புடன் சுமூகமான உறவுகள் பேணப்படும் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்தினை நிராகரித்த போதிலும், ஐக்கிய நாடுகள் அமைப்புடன் பேணப்படும் உறவுகளில் விரிசல் நிலைமை ஏற்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச அரங்கில் இலங்கை காத்திரமான பங்களிப்பினை வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொறிமுறைமை மற்றும் மனிதாபிமான விவகாரங்களில் இலங்கை முக்கியமான பங்களிப்பினை வழங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைத் தீர்மானத்தை நிராகரித்ததன் மூலம் சர்வதேசத்துடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டு விட்டதாக அர்த்தமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment