Pages

Wednesday, April 2, 2014

சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் கே.சண்முகம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை!

Wednesday, April 02, 2014
இலங்கை::சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் கே.சண்முகம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்த உள்ளார்.அமைச்சர் சண்முகம் இன்று இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என தெரிவிக்கப்படுகிறது.

இரட்டை வரி தொடர்பிலான இரு தரப்பு உடன்படிக்கை ஒன்றிலும் அமைச்சர் சண்முகம் கைச்சாத்திட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கிலான உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமைச்சர் சண்முகம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment