Pages

Friday, March 28, 2014

உடையார்கட்டில் முன்னாள் புலி ஒருவர் கைது!

Friday, March 28, 2014
இலங்கை::முல்லைத்தீவு உடையார்கட்டுப் பகுதியில் வைத்து 35 வயதான சின்னத்துரை ஸ்ரீகாந்தன் (என்ற இளைஞன் நேற்று வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் பயங்கரவாதக் குற்றத்தடுப்புப் பிரிவினரால்  (ரி.ஐ.டி) கைது செய்யப்பட்டார்.

புலிகளின் முன்னாள் போராளியான இவர் புனர்வாழ்வு பெற்று விடுதலை செய்யப்பட்டிருந்த நிலையில் மீண்டும் நேற்றிரவு இரவு கைதுசெய்யப்பட்டார்.

யாழ்ப்பாணம் புத்தூர் மேற்கைச் சேர்ந்தவர் இவர் உடையார்கட்டுப் பகுதியில் வசித்து வருகின்றார். உடையார்கட்டுப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெதுப்பகம் ஒன்றில் பணியாற்றிய விசேட தேவையுடைய ஒருவரும்  ரி.ஐ.டி யினரால் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரி.ஐ.டி யினாரால் சந்தேகத்தின்பேரில்  யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த மூவர் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment