Saturday, September 28, 2013
இலங்கை::நடந்து முடிந்த வட மாகாண சபைத் தேர்தலுக்கு சில வெளிநாட்டுத் துதுவர்கள் அங்கேயே நின்று வேலை செய்தது மட்டுமல்லாமல் பல அபேட்சகர்களை அறிமுகப் படுத்தியும் உள்ளார்களென பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தெற்கைப் போன்றே வடக்கிலும் நேர்மையானதும் சுகந்திரமானதுமான தேர்தல் ஒன்றை நடத்தியது பாதுகாப்பு படையின் உதவியுடன் என்பதை எல்லோரும் அறிந்த விடயம் என்றும் வெளிநாட்டுத் துதுவர்களும் ராஜதந்திரிகளும் குற்றம் சாட்டுவது கவலைக்குரிய விடயமென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களில் பலரை சில வெளிநாடுகளே தெரிவு செய்திருந்தன என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பாளர்களைத் தெரிவு செய்து கொண்டிருந்த போது யாழ்ப்பாணத்துக்குச் சென்றிருந்த சில நாடுகளின் இலங்கைக்கான தூதுவர்களும், தங்களுக்கு விருப்பமான சிலரின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களையும் வேட்பாளர்களாகக் களமிறக்கும்படி கேட்டுக் கொண்டனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில வேட்பாளர்கள் வடபுலத்தில் போட்டியிட நிறுத்தப்பட்டனர் என்றும் அவர் கூறியுள்ளார்

No comments:
Post a Comment