Pages

Wednesday, May 1, 2013

கொழும்பு, கெம்பல் மைதானத்தில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மே தின கூட்டத்தில்: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

Wednesday, May 01, 2013
இலங்கை::180 அலகுகள் வரை மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றவர்களுக்கு குறிப்பிட்ட சதவீதத்தினால் மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
 
கொழும்பு கெம்பல் மைதானத்தில் நடைபெறுகின்ற ஐக்கிய மக்கள் சுதந்திக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றியபோது ஜனாதிபதி இதனைக் கூறினார்.
 
பூஜ்ஜியத்திலிருந்து 60 அலகுகள் வரையான பாவனைக்கான மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
 
மின் கட்டண அதிகரிப்பிற்கு எதிராக நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்ற நிலையிலேயே ஜனாதிபதி மேற்கண்ட அறிவிப்பை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment