Friday,January 25, 2013
சென்னை::இலங்கை கடற்பரப்பில் இடம்பெறுகின்ற சட்ட விரோத மீன்பிடி தொடர்பிலான பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காண, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.
த ஓல் இந்திய ரேடியோ இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் இந்திய மீனவர்களின் பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்தித்த போது, இந்த உறுதிப்பாடு காணப்பட்டதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இந்திய இலங்கை கூட்டு ஆணைக்குழு கூட்டத்தில் கலந்துக் கொண்டிருந்த இலங்கை மற்றும் இந்தி வெளியுறவுகள் துறை அமைச்சர்களும், மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் உடன்பாடுகளுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments:
Post a Comment