Pages

Wednesday, December 12, 2012

புலிகள் அமைப்பில் இருந்து இராணுவத்திடம் சரணடைந்து, புனர்வாழ்வு பயிற்சிகளை பெற்று வரும் 46 முன்னாள் புலிபோராளிகள் இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்!

Wednesday, December 12, 2012
இலங்கை::புலிகள் அமைப்பில் இருந்து இராணுவத்திடம் சரணடைந்து, புனர்வாழ்வு பயிற்சிகளை பெற்று வரும் 46 முன்னாள் போராளிகள் இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.

நேற்று ஆரம்பமாகிய இந்த பரீட்சையில், தோற்றும் முன்னாள் புலிபோராளிகளான விசேட பரீட்சை நிலையம் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் பயிற்சி பெற்று வரும் முன்னாள் புலிபோராளிகளே இந்த பரீட்சையில் தோற்றுகின்றனர். இவர்கள் பரீட்;சையில் தோற்ற தேவையான வசதிகளை செய்து கொடுத்துள்ளதாக வவுனியா புனர்வாழ்வு இணைப்பதிகாரி கேர்ணல் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment