Thursday, November 01, 2012
இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது
கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த விசாரணை இரண்டு தினங்களாக மேற்கொள்ளப்பட்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிட்டுள்ளது
இது தொடர்பி;ல் எமது செய்திசேவை குமரன் பத்மநாதனின் கருத்தை அறிய அவருடன் தொடர்பு கொண்டபோதும் அது பலனளிக்கவில்லை..
ராஜிவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக புலிகள் இயக்கத்தின் சர்வதேச பொறுப்பாளராக இருந்த கேபி என்ற குமரன் பத்மநாபாவிடம் இந்திய அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர்.
1991-ம் ஆண்டு ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் விசாரணை நடைபெற்று முடிந்து தீர்ப்பளிக்கப்பட்டு மூன்று பேர் தூக்குத் தண்டனையை எதிர்நோக்கியிருக்கின்றனர். இந்நிலையில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு ராஜிவ் கொலை தொடர்பாக சிபிஐ மற்றும் இந்திய உளவு அமைப்பினர் மீண்டும் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
ராஜிவ் கொலை வழக்கு விசாரணையில் தீர்ப்பு வழங்கப்பட்டாலும் இக்கொலை தொடர்பாக கூடுதல் விசாரணையை மேற்கொள்ள எம்டிஎம்ஏ எனப்படும் பல்நோக்கு கண்காணிப்புக் குழு ஒன்று குறிப்பிட்ட சிலரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் கூறியிருந்தது. இந்த பட்டியலில் கேபியும் இடம்பெற்றிருக்கிறார்.
புலிகளுடனான யுத்தம் முடிவடைந்த பின்னர் இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட கேபி கடந்த அக்டோபர் 17ஆம் திகதி வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். பின்னர் விடுவிக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து சிபிஐ மற்றும் பல்நோக்கு கண்காணிப்புக் குழுவினர் அண்மையில் இலங்கை சென்று கேபியிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தியிருக்கின்றனர். ஆனால் தாம் அப்போது இலங்கைக்கும் மலேசியாவுக்குமாக பயணித்துக் கொண்டிருந்ததால் தமக்கு எதுவும் தெரியாது என்று கேபி கூறியிருக்கிறார்.
ஆனால் ராஜிவ்கொலையில் கேபிக்கு முக்கிய பங்கு இருக்கலாம் என்று சந்தேகிப்பதாக பல்நோக்கு கண்காணிப்புக் குழுவினர் கூறியுள்ளனர். இதனால் மலேசியா மற்றும் இலங்கையில் கேபி தொடர்பாக கூடுதல் தகவல்களை கேட்டிருக்கின்றனராம். ..
கேபி குமரன் பத்மநாதனிடம் இந்திய மத்திய புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டது என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல!
இலங்கை::கேபி எனப்படுகின்ற குமரன் பத்மநாதனிடம் இந்திய மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) விசாரணைகளை மேற்கொண்டது என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று ஒப்புக் கொண்டார்.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இதனை அமைச்சர் ஒப்புக்கொண்டார்.
அண்மையில் இலங்கைக்கு வருகை தந்த மத்திய புலனாய்வுப் பிரிவும் (சிபிஐ) இந்திய உளவுத்துறை அதிகாரிகளும் குமரன் பத்மநாதனை இரண்டு நாட்கள் விசாரணைக்கு உட்படுத்தினார்கள் என இந்திய செய்திகள் தெரிவித்திருந்தன. இச்செய்தி தொடர்பாக அமைச்சரிடம் கேள்வி எழுப்பியபோதே அவர் 'ஆம்' என பதிலளித்தார்

No comments:
Post a Comment