Thursday, November 01, 2012
இலங்கை::திவிநெகும எனப்படும் வாழ்வின் எழுச்சி சட்டமூலம் அரசியலமைப்பிற்கு உட்பட்டதா, இல்லையா என்பது தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஜனாதிபதி மற்றும் சபாநாயகருக்கு நேற்று மாலை தெரியப்படுத்தப்பட்டதாக உயர் நீதிமன்றத்தின் பதிவாளர் மிலிந்த ஜீ முதுன்கொடுவ தெரிவித்துள்ளார்.
இந்த சட்டமூலம் அரசியலமைப்பிற்கு ஏற்புடையதா, இல்லையா என்பது தொடர்பில் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க மற்றும் காமினி அமரதுங்க, கே.ஸ்ரீபவன் ஆகிய நீதியரசர்கள் குழாம் ஆராய்ந்திருந்தது.
திவிநெகும சட்டமூலத்திற்கு சவால் விடுக்கும் வகையில் நான்கு மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

No comments:
Post a Comment