Thursday, November 01, 2012
சென்னை::தமிழகத்தில் ரூ.20 ஆயிரம் கோடிக்கு முதலீடு செய்யும் 12 நிறுவனங்களுடன் நவ.5ம் தேதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டும் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். சட்டசபை விதி 110ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா ஒரு அறிக்கையை சமர்ப்பித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: அமெரிக்க நிறுவனமான பிபிஜியுடன் இணைந்து ஹர்ஷா குரூப் நிறுவனங்கள் 4,100 கோடி ரூபாய் முதலீட்டில் காஞ்சிபுரத்தில் உள்ள சிப்காட் தொழிற் பூங்காவில் ஃபைபர் கிளாஸ் மற்றும் புளோட் கிளாஸ் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்கும். இதன் மூலம் 1850 பேர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும். டி.வி.எஸ் குழும நிறுவனங்கள் ரூ.700 கோடி முதலீட்டில் சென்னை, ஓசூர் மற்றும் ஓரகடம் ஆகிய பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளை விரிவுபடுத்தும்.
முருகப்பா குழுமம், ரூ.500 கோடி முதலீட்டில் திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொழிற்சாலைகள் அமைக்க இருக்கிறது.
டென்மார்க் நாட்டைச் சேர்ந்த டான்பாஸ் நிறுவனம் தனது உற்பத்தி ஆலைக்காக சென்னை ஒரகடத்தில் ரூ.500 கோடி முதலீடு செய்ய இருக்கிறது. சான்மினா என்ற அமெரிக்க எலக்ட்ரானிக்ஸ் வன்பொருள் தயாரிப்பு நிறுவனம் ஒரகடத்தில் உள்ள தொழிற்சாலையினை மேலும் விரிவாக்கம் செய்வதற்காக 250 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. நோக்கியா நிறுவனம் தற்போது மேலும் ரூ.250 கோடி முதலீடு செய்ய முன் வந்துள்ளது. அமெரிக்க ஆம்வே நிறுவனம் தனது உற்பத்தியினை திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் ரூ.300 கோடியில் துவக்க உள்ளது.
ஹுண்டாய் மோட்டார் நிறுவனம் இருங்காட்டுக் கோட்டையில் தனது தொழிற்சாலையினை விரிவாக்கம் செய்ய ரூ.4 ஆயிரம் கோடி முதலீடு செய்கிறது. இந்தோ ராமா நிறுவனம் தனது பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலை மற்றும் சிந்தட்டிக் ஃபைபர் தயாரிப்பு தொழிற்சாலை ஆகியவற்றினை ரூ.4,500 கோடியில் நிறுவ முன் வந்துள்ளது. பி.ஜி.ஆர். எனர்ஜி குரூப் என்ற இந்திய நிறுவனம் ரூ.2,325 கோடியில் தொழிற்சாலையை காஞ்சிபுரம் மாவட்டம் நெற்குணப்பட்டு கிராமத்தில் அமைக்க உள்ளது. கோவை, அன்னூர் அருகே ரூ.3,100 கோடி முதலீட்டில் ஓர் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைக்க ஆட் இண்டஸ்டிரியல் பார்க் என்ற நிறுவனம் முன்வந்துள்ளது.
செயின்ட் கோபெயின் நிறுவனம் தனது விரிவாக்கப் பணிகளுக்காக ஸ்ரீபெரும்புதூர் மற்றும் பெருந்துறையில் ரூ.400 கோடி முதலீடு செய்கிறது. மேற்படி 12 நிறுவனங்கள் ரூ.20,925 கோடி ரூபாய் அளவுக்கு தமிழ்நாட்டில் முதலீடு செய்ய இருப்பதால், 36,855 பேர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பும், சுமார் ஒரு லட்சம் பேர்களுக்கு மறைமுக வேலைவாய்ப்பும் உருவாகும். மேற்படி 12 நிறுவனங்களுடன் 5 நவம்பர், 2012 அன்று எனது தலைமையிலான அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கையொப்பமிட உள்ளது. தமிழக தொழில்துறை வரலாற்றிலேயே ஒரே நாளில் கையொப்பமிடப்படும் மிகப் பெரிய முதலீட்டு தொகை இதுதான். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

No comments:
Post a Comment