Monday, October 29, 2012
சென்னை::கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக் கோரி போராடி வரும் அணு உலை எதிர்பார்ளர்கள் இன்று சென்னை கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்து இருந்தார்கள். இந்த போராட்டத்துக்கு ம.தி.மு.க., பா.ம.க., விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, நாம் தமிழர் கட்சி, மற்றும் தமிழர்கள் கூட்டமைப்பு, தமிழ் தேசிய விடுதலை இயக்கம் உள்பட மீனவர்கள் சங்கங்கள், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு தொழிற்சங்கம் உள்பட பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்து இருந்தன.
முற்றுகை போராட்டத்துக்கு போலீஸ் அனுமதி வழங்கவில்லை. வெளியூர்களில் இருந்து வரும் தொண்டர்களை வழியிலேயே தடுத்து கைது செய்ய 100-க்கும் மேற்பட்ட இடங்களில் போலீசார் சோதனை சாவடிகள் அமைத்து இருந்தனர். வெளி மாவட்டங்களில் இருந்து போராட்டத்துக்கு வந்தவர்கள் ஆங்காங்கே கைது செய்யப்பட்டார்கள். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் முன்பு ஆர்ப்பாட்டம் மட்டும் நடத்த அனுமதிக்கப்பட்டிருந்தது.
போராட்டத்தில் கலந்து கொள்ள ஆயிரக் கணக்கானவர்கள் காலை முதலே திரண்டிருந்தனர். முற்றுகை போராட்டத்தை பழ.நெடுமாறன் தொடங்கி வைத்தார். ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், பா.ம.க. சார்பில் வியனரசு, மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், பெரியார் திராவிட கழக தலைவர் கொளத்தூர் மணி பேராசிரியர் தீரன் மற்றும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும் ஒரே மேடையில் கண்டன உரை நிகழ்த்துகிறார்க்ள.
ஆர்ப்பாட்டத்தில் பழ.நெடுமாறன் பேசியதாவது:-
கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக் கோரி கடந்த 450 நாட்களாக மக்கள் போராடி வருகிறார்கள். அறவழியில் போராடும் மக்களை அடக்கு முறையில் ஒடுக்க பார்க்கிறார்கள். அறவழி போராட்டத்தை யாராலும் ஒடுக்க முடியாது. அணு உலையை மூடும் வரை போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் பேசினார்.
திருமாவளவன் பேசியதாவது:-
கூடங்குளம் அணு உலை பிரச்சினையில் அனைத்து கட்சிகளும் ஒன்று திரண்டு இருக்கின்றன. இதனால் இந்த போராட்டம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். கூடங்குளம் மட்டுமின்றி இந்தியாவில் எங்கும் அணு உலைகள் அமைகக் கூடாது. ஏற்கனவே இருக்கும் அணு உலைகளையும் மூட வேண்டும் கூடங்குளம் அணு உலையை மூடும் வரை அனைத்து கட்சி தலைவர்களும் தொடர்ந்து போராடுவோம்.
தமிழகத்துக்கு 1000 மெகாவாட் மின்சாரம் கேட்டு முதல்-அமைச்சர் ஜெயலலிதா மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார். இதற்காக அவர் போராட்டம் நடத்தினால் நாங்களும் ஆதரவு கொடுப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
வேல்முருகன் பேசும் போது. கூடங்குளம் போராட்ட குழுவினரை மத்திய மாநில அரசுகள் நசுக்கி வருகிறது. பொய் வழக்கு, அடக்கு முறை போராட்டத்தை நசுக்க முடியாது என்றார். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இழுத்து மூடு இழுத்து மூடு அணுமின் நிலையத்தை இழுத்து மூடு 144 தடை உத்தரவை வாபஸ் வாங்கு.
கூடங்குளத்தில் இருந்து போலீசாரை வெளியேற்று என்பது உள்பட பல்வேறு கோஷங்களை எழுப்பினார்கள். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேரணியாக செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். வைகோ, பழ.நெடுமாறன், திருமாவளவன், வேல்முருகன், ஜவாஹிருல்லா உள்பட அனைத்து தலைவர்களும் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல் ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, வேளச்சேரி மணிமாறன், விடுதலை சிறுத்தைகள் நிர்வாகிகள் பாலாஜி, இரா.செல்வம், தமிழக வாழ்ரிமை கட்சி நிர்வாகிகள் காமராஜ், காவேரி, சண்முகம், யூனுஸ்கான், வாசுதேவன், ஜெயலட்சுமி, சி.பி.எம். மக்கள் விடுதலை இயக்க நிர்வாகிகள் சிதம்பரநாதன், பாண்டியன், பாலசுந்தரம், குமார் உள்பட அனைத்து கட்சிகளையும் சேர்ந்த சுமார் 3 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.
கூடங்குளம் அணு உலையை மூட வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில் சட்டசபையை முற்றுகையிடும் போராட்டம் நடத்த இன்று காலை எழும்பூர் நரியங்காடு போலீஸ் குடியிருப்பு அருகில் கட்சித் தலைவர் சீமான் தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். அப்போது அவர்கள் கூடங்குளம் அணு உலைக்கு எதிராகவும் மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர்.
போராட்டத்தின் போது சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-
கூடங்குளம் அணு உலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக அறவழியில் போராடி வருகிறார்கள். ஆனால் அவர்களின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவி சாய்க்க வில்லை. அப்பகுதி மக்களின் நலன் கருதி கூடங்குளம் அணு உலையை உடனடியாக மூட வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி தான் நாங்களும் போராடி வருகிறோம்.
இன்று சட்டசபையை முற்றுகையிடப் போவதாக அறிவித்துள்ள நாங்கள் இதற்காக சட்டசபைக்குள் நுழைந்து போராடவும் தயங்க மாட்டோம். எனவே மத்திய-மாநில அரசுகள் கூடங்குளம் பகுதி மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து அணு உலையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிர்வாகிகள் தமிழ் முழக்கம் சாகுல்அமீது, அய்ய நாதன், அன்பு தென்னரசன், கோட்டை குமார், ஆவல் கணேசன், அறிவுச்செல்வம், தங்கராசு, நல்லதுரை, மாரிச்செந்தில், அமுதா நம்பி, உமா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சீமான் தலைமையில் அங்கிருந்து சட்டசபையை முற்றுகையிடுவதற்காக ஊர்வலமாக சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதையொட்டி துணை கமிஷனர் சரவணன், கூடுதல் துணை கமிஷனர் ஜெயக்குமார், உதவி கமிஷனர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

No comments:
Post a Comment