Monday, October 29, 2012

யாழ்ப்பாண குடாநாட்டை தனிமைப்படுத்தும் நோக்கில் புலிகள் 1998ம் ஆண்டு லயன் எயார் பயணிகள் விமானம் மீது தாக்குதல் நடத்தியதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்!

Monday, October 29, 2012
இலங்கை::யாழ்ப்பாண குடாநாட்டை தனிமைப்படுத்தும் நோக்கில்  புலிகள் லயன் எயார் பயணிகள் விமானம் மீது தாக்குதல் நடத்தியதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். 1998ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.
 புலிகளின் யுத்த தந்திரோபாயங்களில் ஓர் அங்கமாக இந்தத் தாக்குதலை நோக்க வேண்டுமென இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இதேவேளை, விமானத்தின் இடிபாடுகளை மீட்கும் பணிகள் தமது முன்னிலையில் நடைபெற வேண்டுமென மன்னார் நீதவான் அறிவித்துள்ளார். இந்தத் தாக்குதலை நடத்தியதற்காக புலிகளின் தலைவர் பிரபாகரன் தமக்கு கைத்துப்பாக்கி ஒன்றை பரிசாக வழங்கியதாக முன்னாள் புலி உறுப்பினர் ஒருவர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரிடம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment