Pages

Monday, September 3, 2012

கிழக்கு மாகாணத்தில் விசேட பாதுகாப்பு திட்டம் - பொலிஸ் தலைமையகம்!

Monday, September 03, 2012
இலங்கை::கிழக்கு மாகாணத்தில் விசேட பாதுகாப்பு திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த விசேட திட்டம் தேர்தல் நிறைவடையும் வரையில், அமுலில் இருக்குமென ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

மாகாணத்தின் பாதுகாப்பிற்காக இன்று முதல் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரை ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்தமையே இதற்கு முக்கிய காரணமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

விசேடமாக சம்மாந்துறை, அக்கரைப்பற்று, கல்முனை, பொத்துவில் ஆகிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அதிக வன்முறைகள் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் மாகாணத்தின் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக கொழும்பிலிருந்து பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

தேர்தல் வன்முறைகளில் ஈடுபடுவோர் மற்றும் சட்டவிரோத பிரசாரங்களை முன்னெடுப்போரை கைதுசெய்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment