Friday, June 8, 2012

தற்கொலை படை தாக்குதல் பயிற்சி : அல் கய்தா விளம்பரம்!

Friday, June, 08, 2012
பாக்தாத்::அமெரிக்கா, இஸ்ரேல், பிரான்ஸ் நாடுகளுக்கு எதிராக தற்கொலை படை தாக்குதல் நடத்த பயிற்சி அளிக்கப்படும் என்று அல் கய்தா தீவிரவாதிகள் இன்டர்நெட்டில் விளம்பரம் வெளியிட்டுள்ளனர். அரபு நாடுகளை சேர்ந்த அல்டா, ஷிமுக் அல் இஸ்லாம், ஹோனின் போன்ற வெப்சைட்களில் இந்த விளம்பரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இஸ்லாமியத்துக்கு எதிராக செயல்படும் இந்த எதிரிகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்த வேண்டும். அந்த நோக்கத்துக்காகவே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேற்குறிப்பிட்ட 3 நாடுகளுக்கு எதிராக தற்கொலை படை தாக்குதல் நடத்த விரும்புபவர்கள் இ மெயிலில் விண்ணப்பிக்கலாம். அதில், தங்கள் அனுபவத்தை குறிப்பிட வேண்டும். மேலும் 3 நாடுகளில் எந்த இலக்கை தாக்க விரும்புகிறீர்கள் என்று தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment