Pages

Thursday, June 28, 2012

30 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் சிறையிலிருந்து விடுதலையானார் சுர்ஜீத் சிங்!

Thursday, June 28, 2012
இஸ்லாமாபாத்::பாகிஸ்தான் சிறையிலிருந்து சுர்ஜீத் சிங் விடுதலை செய்யப்பட்டார்.30 வருடங்களுக்குப் பிறகு சிறையிலிருந்து சுர்ஜீத் சிங் விடுதலையாகியுள்ளார்.பாகிஸ்தானின் லாக்பாத் சிறையிலிருந்து சுர்ஜீத் சிங் விடுதலை செய்யப்பட்டுள்ளார். விடுதலை செய்யப்பட்ட சுர்ஜீத் சிங் வாகா எல்லைப்பகுதி வழியாக இந்தியாவிற்கு வர விருக்கிறார்.அவரை வரவேற்க அவரது குடும்பத்தினர் வாகா எல்லைப் பகுதிக்குச் சென்றுள்ளது. இந்தியாவைச் சார்ந்த சுர்ஜீத் சிங்கை உளவு பார்த்த குற்றத்திற்காக பாகிஸ்தான் அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு தபோது சிங்யை விடுதலை செய்துள்ளது பாகிஸ்தான் அரசு என்பது குறிப்பிடத்தக்கது...

சச்சா சிங் என்பவரின் மகனான சுர்ஜீத் சிங், கடந்த 30 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் ஜியா உல் ஹக்கின் ராணுவ ஆட்சி நடந்தபோது அங்கு உளவு பார்த்ததாக சுர்ஜித் சிங் மீது குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். இதையடுத்து கடந்த 1985ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவ சட்டத்தின்படி அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. பின்னர் 1989ம் ஆண்டு அப்போதைய பிரதமர் பெனாசிர் பூட்டோ பரிந்துரையின் பேரில், அதிபர் குலாம் இஷாக் கான் உத்தரவின் பேரில் அவரது மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. அவரை தற்போது பாகிஸ்தான் விடுவிப்பதாக நேற்று முன்தினம் அறிவித்தது.

ஆனால் அறிவிப்பு வெளியிடுகையில் தூக்கு தண்டனை கைதியான சரப்ஜித் சிங்கை அதிபர் சர்தாரி மன்னித்து விடுதலை செய்வதாக செய்திகள் வெளியாகின. இதனால் சரப்ஜித் சிங் குடும்பத்தினர் ஆனந்தக் கண்ணீர் விட்டு உற்றார், உறவினர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழந்தனர். அவர்கள் தலையில் இடியை இறக்குவது போன்று சற்று நேரத்தில் சரப்ஜித் சிங் அல்ல சுர்ஜித் சிங்கை தான் விடுதலை செய்கிறோம். தவறாக சரப்ஜித் சிங் என்று அறிவித்துவிட்டோம் என்று பாகிஸ்தான் மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

இத்தனை பல்டிகளுக்குப் பிறகு சுர்ஜித் சிங் இன்று காலை லாகூரில் உள்ள கோட் லாக்பட் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். அவர் வாகா எல்லையில் உள்ள இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். அங்கு அவருக்காக காத்திருந்த அவரது உறவினர்கள் அவரைப் பார்த்ததும் ஆனந்தக் கண்ணீர் விட்டனர்.

No comments:

Post a Comment