Pages

Sunday, April 1, 2012

இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல்!

Sunday, April 01, 2012
இலங்கை::பதுளை பஸ் தரிப்பிடத்தில் இரு தனியார் பஸ் ஊழியர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலை சமாதானப்படுத்துவதற்காகச் சென்ற இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல் சம்பவம் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஒரு தனியார் பஸ் நடத்துநர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பதுளை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களே காயமடைந்துள்ளதாகவும், இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளைப் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

No comments:

Post a Comment