Pages

Saturday, October 1, 2011

யாழ்ப்பாணத்தில் வீதி விபத்துக்கள் அதிகரித்துள்ளன!

Saturday, October 01, 2011
யாழ்ப்பாணத்தில் தற்சமயம் வீதி விபத்துக்கள் அதிகரித்துள்ளதாக மாவட்ட காவல்துறை தலைமை பொறுப்பதிகாரி சமன் சிகேரா தெரிவித்துள்ளார்.

மதுபோதையில் வாகனங்கள் செலுத்துவதே அதிகளவான விபத்துக்கள் ஏற்படுவதற்கான காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த தகவை வெளியிட்டார்.

இவ்வாறு விபத்துக்களில் சிக்கி சிகிச்சை பெறுவோரின் தொகை அதிகரித்துள்ளதாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையினால் வெளியிடப்பட்டுள்ள புள்ளி விபரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விபத்துக்களைக் கட்டுப்படுத்துவதற்கான விசேட வேலைத்திட்டங்களை விரைவில் அமுல்படுத்தப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் யாழ்ப்பாண மாவட்ட காவல்துறை தலைமை பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

No comments:

Post a Comment