Pages

Saturday, October 1, 2011

நாட்டில் அசாதாரண நிலைமைகள் ஏற்படும் போது நிலைமைகளைக் கட்டுக்குள் கொண்டு வர இராணுவம் தயார் நிலையில்- இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜெகத் ஜயசூரிய!

Saturday, October 01, 2011
நாட்டில் அசாதாரண நிலைமைகள் ஏற்படும் போது அதனைக் கட்டுப்படுத்தப்பட்ட பொலிஸாரால் முடியாவிட்டால் இராணுவத்தினர் தலையிட்டு நீதியையும் சமாதானத்தையும் தோற்றுவித்து நாட்டின் பாதுகாப்பை ஸ்திரப்படுத்துவர் என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜெகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். இதற்காக இராணுவத்தினர் எந்த வேளையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

அநுராதபுரத்தில் இன்று (01) இடம்பெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் கண்ணி வெடியகற்றும் பணிகளும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்தப் பணியில் இராணுவத்தினரும் ஈடுபடுத்தப்படுவர் எனவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment