Pages

Saturday, October 29, 2011

அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரிகளுடன் இடம் பெற்ற சந்திப்புக்கள் மிகவும் பயன் தருபவை-(புலி)கூட்டமைப்பு!

Saturday, October 29, 2011
அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரிகளுடன் இடம் பெற்ற சந்திப்புக்கள் மிகவும் ஆரோக்கியமானவையாகவும் பயன் தருபவையாகவும் அமைந்துள்ளன என தமிழ்த் தேசியக்(புலி)கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெக்காவுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை விஜயம் செய்த தமிழ்த் தேசியக்(புலி)கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த மூன்று தினங்களாக அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர். இந்த நிலையிலேயே இப்பேச்சுவார்த்தையில் பங்குபற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான பிரதி ராஜாங்க செயலாளர் ரொபட் ஓ பிளேக்கையும் இவர்கள் சந்தித்திருந்தனர். சந்திப்புக்கள் ஆரோக்கியமானவையாகவும், பயனுள்ளவையாகவும், அமைந்திருந்தன. சந்திப்புக்கள் குறித்து அறிக்கை வாயிலாக மக்களுக்கு அறிவிப்போம் எனவும் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை கனேடிய தலைநகரான ஒட்டாவாவில் அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சந்திப்புக்களில் (புலி)கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை கலந்து கொள்ளவுள்ளனர்.

No comments:

Post a Comment